-5 %
Available
போர்க்களத்தின் செய்திகள்
வி.எஸ்.முஹம்மது அமீன் (ஆசிரியர்)
Categories:
International Politics | சர்வதேச அரசியல்
₹133
₹140
- Year: 2017
- ISBN: 9789381975947
- Page: 144
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகத்தின் ஒரு துண்டு நிலத்திற்காக ஏன் இத்தனை நெடிய போராட்டம் ? இஸ்ரேல் ஏன் பாலஸ்தீனத்தைத் திட்டமிட்டு திருடிக் கொண்டிருக்கிறது ? உலக நாடுகள் ஏன் மௌனத்தில் இருக்கின்றன. எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்குமான உறவு என்ன ? அரபக தேசங்கள் பாலஸ்தீன யுத்தத்தில் நயவஞ்சகத்தனம் காட்டுவது ஏன் ? யாசர் அராபத் போராளியா? சமாதானத்தூதுவரா? ஹமாஸ் எப்படி தீவிரவாத இயக்கமாகும் ? நீரலைகளாய் விருந்துக்கொண்டே செல்லும் கேள்விகளுக்கான விடைதான் இந்த போர்க்களத்தின் செய்திகள். யூதர்களின் சூழ்ச்சிவலையைச் சொல்லும் அதேவேளையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்றும் போராடிவரும் யூத இயக்கங்களை குறித்தும் இந்நூல் பேசுகிறது. யாசர் அராபத்தின் கொரில்லா ஹாக்குதலுக்கும் சமாதானத்திற்குமான முரணை புரிந்துக்கொள்ள அவருடைய யுத்த நோக்கத்தை நாம் விசாரணை செய்ய வேண்டிஇருக்கிறது. பாலஸ்தீன விவகாரத்தில் ஐநா சபையின் நிலைபாட்டை ஒவ்வொரு நகர்வாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. துருக்கி, துனிசியாவின் அண்மைகால ஒத்துழைப்பும், எகிப்தின் துரோகங்களும் அதற்கு பின்னால் இருந்து இயங்கும் அரபக தேசங்களின் நயவஞ்சகத்தையும் ஆதாரங்களுடன் அலச வேண்டியிருக்கிறது. யூத சியோனிசத்திற்கும், பாசிசத்திற்குமான அடிப்படை ஒற்றுமையை மிக நுட்பமாக நாம் அவதானிக்க வேண்டியிருக்கிறது. அதற்காக வரலாற்றின் குறுக்கும் நெடுக்குமான ஒரு பயண ஓட்டத்தை இந்நூல் முழுவதும் காண முடியும். கோல்டா மேய்ர், ரேச்சல் கெர்ரி, டாக்டர் ஆங்க் ஸ்வீ சாய், இமாம் ஹஸனுல் பன்னா, ராசித் அல் கனூஸி, தாரிக் பின் ஸுயாத், மொசாத், இக்வானுல் முஸ்லிமுன், ஷேக் அஹ்மது யாசீன், அடால்ப் ஐக்மேன் , காலித் மிஷ்அல் என முன்னும் பின்னுமான பல வரலாற்றுப் பக்கங்களுக்குள்ளும் இந்த நூலின் வழியாக நாம் நுழைந்து திரும்ப வேண்டியிருக்கும்.
Book Details | |
Book Title | போர்க்களத்தின் செய்திகள் (Porkkalaththin Seithigal) |
Author | வி.எஸ்.முஹம்மது அமீன் (Vi.Es.Muhammadhu Ameen) |
ISBN | 9789381975947 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 144 |
Year | 2017 |